சோழவந்தான் அருகே முளைப்பாரி திருவிழா
சோழவந்தான் அருகே முளைப்பாரி திருவிழா நடைபெற்றது
மதுரை
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோவில் ஆனி திருவிழா 9 நாட்கள் நடந்தது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 7-ம் நாள் பூச்சொரிதல் விழா, 8-ம் நாள் கிராம மக்கள் சார்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. இரவு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். 9-ம் நாள் அதிகாலை வைகை ஆற்றில் முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம மக்கள் சார்பாக சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Related Tags :
Next Story