முளைப்பாரி திருவிழா


முளைப்பாரி திருவிழா
x
தினத்தந்தி 5 Oct 2023 12:15 AM IST (Updated: 5 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முளைப்பாரி திருவிழா நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள தியாகவன்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். ஒயிலாட்டம், பெண்களின் கும்மிபாட்டு, குலவைப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் புத்தாடை அணிந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று நீர் நிலையில் கரைத்தனர். விழா ஏற்பாடுகளை மாப்பிள்ளைசாமி, சாத்தையா, ரவி, தர்மலிங்கம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story