ஏழைகாத்த அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா
வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் கள்ளர் தெருவில் அமைந்துள்ள மந்த கருப்பண்ணசாமி, ஏழைகாத்த அம்மன், காளியம்மன் கோவிலில் 13-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு உலக நன்மை வேண்டி வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பெண்கள் முளைப்பாரியுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று திருநகரி ஆற்றில் முளைப்பாரியை கரைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், நாட்டாமை, பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story