அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்


அம்மன் கோவிலில்   முளைப்பாரி ஊர்வலம்
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:18 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை மூங்கில் ஊரணி முத்துமாரியம்மன் அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது

சிவகங்கை

மானாமதுரை அருகே உள்ள மூங்கில் ஊரணி பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கடந்த வாரம் முளைப்பாரி உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஏராளமானோா் காப்பு கட்டி விரதம் தொடங்கினா். பெண்கள் கோவிலில் முத்து பரப்பி முளைப்பாரி வளா்த்தனா். விழா நாள்களில் தினமும் இரவு பெண்கள் கூடி முளைப்பாரி சட்டிகளை சுற்றி வந்து கும்மி பாடல்கள் பாடினா். இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

நேற்று முன்தினம் முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. திரளான பெண்கள் முளைப்பாரி சட்டிகளை தலையில் சுமந்து ஊா்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனா். பின்னா் நேற்று மாலை முளைப்பாரி கரைத்தல் நிகழ்வு நடைபெற்றது. ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மியடித்தும் முளைப்பாரியை நீா் நிலையில் கரைத்தனா்.


Next Story