எட்டயபுரம் கோவில் விழாவில் முளைப்பாரி ஊர்வலம்
எட்டயபுரம் கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
எட்டயபுரம் புது அம்மன் கோவில் பொங்கல் மற்றும் கொடை விழாவில் பால்குட ஊர்வலம், துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இரவு முளைப்பாரி, பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் முளைப்பாரி அம்மன் தெப்பக்குளத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு கோவிலிருந்து புறப்பட்ட முளைப்பாரி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பெரிய தெப்பக்குளத்தில் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story