சக்தி காளியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்


சக்தி காளியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
x

சக்தி காளியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சக்தி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் உலக நன்மை வேண்டி சக்தி கரகம், பால்குடம் மற்றும் காளியாட்டம் நிகழ்வு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, அம்மன் வீதியுலா நடைபெற்றது. இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சக்தி கரகம் நையாண்டி மற்றும் செண்டை மேளத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். அதன்பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மீன்சுருட்டி, வங்குடி, கல்லாத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், விழா கமிட்டி குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story