முல்லை பூ கிலோ ரூ.1,500- க்கு விற்பனை


முல்லை பூ கிலோ ரூ.1,500- க்கு விற்பனை
x

கீரமங்கலம் பூ கமிஷன் கடையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முல்லை பூ கிலோ ரூ.1,500 -க்கு விற்பனை ஆனது.

புதுக்கோட்டை

பூ உற்பத்தி

மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலத்தை சுற்றியுள்ள செரியலூர், நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி, பெரியாளூர், நெய்வத்தளி, மேற்பனைக்காடு, கரம்பக்காடு, அணவயல், மாங்காடு, வடகாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் மேலும் வம்பன், மாஞ்சான்விடுதி, மழையூர், சம்மட்டிவிடுதி உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூக்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து கீரமங்கலம், கொத்தமங்கலம் பூ கமிஷன் கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. வெளியூர் வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

முல்லை பூ கிலோ ரூ.1,500

கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகளுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 5 முதல் 10 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில் பண்டிகை, திருவிழா, சுபமுகூர்த்த நாட்களில் அதிக விலைக்கு பூக்கள் விற்பனை ஆகும். மற்ற நாட்களில் சராசரியான விலை கிடைக்கும். பல நாட்கள் விற்பனை ஆகாமல் பூக்கள் குப்பையில் கொட்டும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதாவது முல்லை பூ கிலோ ரூ.1,500, மல்லிகை பூ கிலோ ரூ.1,000, கனகாம்பரம் கிலோ ரூ.700, காட்டுமல்லி பூ கிலோ ரூ.350-க்கும் விற்பனை ஆனது. தொடர் பனி காரணமாக பூ உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story