முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - கேரள அரசுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். ;
சென்னை,
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என , முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார்.
மேலும் முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மதகுகளை திறப்பது குறித்து கேரள அரசிடம் 24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்என பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது ;
முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது.முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்.என தெரிவித்துள்ளார்.