முல்லை பெரியாறு விவகாரம்....கடிதம் மட்டும் தான் எழுதுவீர்களா ? முதல்-அமைச்சருக்கு தமிழிசை கேள்வி


முல்லை பெரியாறு விவகாரம்....கடிதம் மட்டும் தான் எழுதுவீர்களா ? முதல்-அமைச்சருக்கு தமிழிசை கேள்வி
x

முல்லை பெரியாறு அணையிலும், சிலந்தி அணையிலும் தமிழரின் உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னரும், தென்சென்னை பா.ஜனதா வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

சாவி இருக்கிறது என்ற உடனேயே தமிழர்களை திருடர்கள் என்று கூறினார்கள் என்று பொய் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் அவர்களே...இன்று கேரளா அரசு முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு நாங்களே அணையை கட்டிக் கொள்வோம் என்று கூறுகிறார்கள்.

இன்று நம் விவசாயிகளின் நீர் ஆதாரமாக இருக்கும் ஒரு அணையை உங்கள் கூட்டணியைச் சார்ந்த கேரளா அரசு முழுவதுமாக களவாட நினைக்கிறது உங்களிடமிருந்து பதில் என்ன? . முல்லை பெரியாறு அணையிலும், சிலந்தி அணையிலும் தமிழரின் உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இப்போது மௌனமாக இருப்பது ஏன் ? இதுதான் உங்களின் தமிழ்ப்பற்றா ? தமிழர்கள் மீதான பற்றா? தமிழ்நாட்டு உரிமையை பாதுகாக்கும் நிலைமையா ? உங்கள் மெளனம் கலையுமா? வழக்கம்போல் கடிதம் மட்டும் தான் எழுதுவீர்களா?. என்று தெரிவித்துள்ளார்.


Next Story