130 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியாக குறைந்தது
தேனி
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழைப்பொழிவு இல்லை. இதனால் நீர்வரத்து குறைந்ததால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேலும் தமிழக பகுதிக்கு தொடர்ந்து அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியாக குறைந்தது. இன்று அணையின் நீர்மட்டம் 130.60 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 254 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1555 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
Related Tags :
Next Story