137 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்


137 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
x

முல்லைப்பொியாறு அணை நீர்மட்டம் 137 அடியாக குறைந்தது

தேனி

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கடந்த 13-ந்தேதி காலை 138.15 அடி வரை உயர்ந்தது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை குறைந்ததால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இன்று அணையின் நீர்மட்டம் 137.10 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 969 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,867 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.


Next Story