முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது: கேரள பகுதிக்கு முதற்கட்ட எச்சரிக்கை


முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது: கேரள பகுதிக்கு முதற்கட்ட எச்சரிக்கை
x

கோப்புப்படம் 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, கேரள பகுதிக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தேனி,

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், இன்று நண்பகலில் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியை எட்டியது. அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, கேரள பகுதிக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story