முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா


முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா
x

கே.வி.குப்பம் அருகே முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

வேலூர்

கே.வி.குப்பம் அடுத்த கொசவன்புதூர் கிராமம், கொல்லைமேடு பகுதியில் முனீஸ்வரன் கோவில் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், அஷ்டதிக் பூஜை, பூரணாஹூதி, முனீஸ்வரர் கரிகோலம், முதல், இரண்டாம் கால பூஜைகள், கோபூஜை, தம்பதி சங்கல்பம், கலசங்கள் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மகாகும்பாபிஷேகம், அன்னதானம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.


Next Story