நகராட்சி நிர்வாகம் சட்டவிதிகள் திருத்தம் - சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு


நகராட்சி நிர்வாகம் சட்டவிதிகள் திருத்தம் - சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு
x

சட்டவிதிகள் திருத்தம் குறித்த எதிர்மறை கருத்துக்களை முதல்-அமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் சட்டவிதிகள் திருத்தத்திற்கு சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் ராஜசேகர், இந்த சட்டவிதிகள் திருத்தத்தால் சென்னை மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் என அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் மற்றும் உரிமைகளில் பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் சட்டவிதிகள் திருத்தம் குறித்த எதிர்மறை கருத்துக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும், இதில் இருந்து சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மாமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் சட்டவிதிகள் திருத்தத்தை ஏற்க முடியாது என மாமன்றத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மேயர் பிரியா உறுதியளித்தார்.



Next Story