கரூர் பஸ்நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு


கரூர் பஸ்நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
x

கரூர் பஸ்நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

கரூர்

கரூர் பஸ்நிலையம், மினி பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாடகைதாரர்களிடம் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள கடையின் அளவிற்கு மட்டுமே இடத்தை பயன்படுத்த வேண்டும், முன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும், வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக வாடகை நிலுவை தொகையை மாநகராட்சியில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைகளை முறையாக பராமரித்து அவற்றை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட கழிவரை கட்டண தொகை வெளியில் தெரியும்படி எழுதி வைக்கப்பட வேண்டும் எனறார் அறிவுறுத்தினார். மேலும் பஸ் நிலையத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள சுகாதார பணியாளர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.


Next Story