பேரூராட்சி கவுன்சிலர்கள் போராட்டம்
வத்திராயிருப்பு பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி கூட்டம்
வத்திராயிருப்பு பேரூராட்சி கூட்டம் தலைவர் தவமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது அடிப்படை பணிகளை மேற்கொள்ள வார்டுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்படவில்லை.
வத்திராயிருப்பு பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளாமல் வேலை செய்ததாக கூறி மோசடி நடந்துள்ளது பற்றியும் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சுய உதவிக்குழுவுக்கு மட்டுமே சுகாதார பணிகள் ஒதுக்கப்படுகிறது. பிற குழுக்களுக்கு எந்த பணிகளும் ஒதுக்கப்படுவதில்லை.
கவுன்சிலர்கள் போராட்டம்
பேரூராட்சியில் நடைபெறும் வரவு, செலவு கணக்குகளை கவுன்சிலர்கள் கேட்டால் உரிய பதில் அளிப்பது இல்லை. பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
கவுன்சிலர்கள் கூறும் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துகின்றனர் என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு பேரூராட்சி அலுவலக மன்ற கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கவுன்சிலர்கள் விடுத்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.