நகராட்சி ஊழியர் மூழ்கி சாவு


நகராட்சி ஊழியர் மூழ்கி சாவு
x

நகராட்சி ஊழியர் மூழ்கி சாவு

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் ஆகாஷ் (வயது 21). இவர் மேற்கண்ட பகுதியில் உள்ள ஒரு நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலைபார்த்து வந்தார். நேற்று இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 12 பேருடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தார். அப்போது அவர்கள் வேளாங்கண்ணி கடலில் குளித்து கொண்டிருந்தனர். இதில் ஆகாஷ் கடலில் மூழ்கினார். இதனை பார்த்த அவரது நண்பர்கள், உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story