பேரூராட்சி ஊழியர்கள் சங்க செயற்குழு கூட்டம்


பேரூராட்சி ஊழியர்கள் சங்க செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்கலம்பேட்டையில் பேரூராட்சி ஊழியர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

கடலூர்

மங்கலம்பேட்டை,

தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மங்கலம்பேட்டையில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் துரை ரங்க ராமானுஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஜெயபிரகாஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில தலைவர் தங்கவேல் கலந்து கொண்டு பேசினார். இதில் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மகளிர் சுய உதவி குழுவினர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், தற்காலிக தொழில்நுட்ப உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் துரைராஜ் மற்றும் இதர அலுவலகப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முருகன் நன்றி கூறினார்.


Next Story