தென்னூர் மேம்பாலத்தின் கீழ்பகுதியை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர்கள்


தென்னூர் மேம்பாலத்தின் கீழ்பகுதியை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர்கள்
x

தென்னூர் மேம்பாலத்தின் கீழ்பகுதியை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.

திருச்சி

மாநகர மேம்பாலங்கள்

திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள பாலக்கரை, தென்னூர், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், எடமலைப்பட்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் உள்ளன. இந்த மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் பெரும்பாலும் மக்கள் பயன்பாடு இல்லாததால் அங்கு குப்பைகள் கொட்டப்படும் இடமாகவும், இதனால் சுகாதார சீர்கேடாக இருப்பதாகவும், சமூகவிரோதிகளின் கூடாரமாக அலங்கோலமாக இருப்பதாகவும் 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

குறிப்பாக தென்னூர் மேம்பாலத்தின் கீழ் மதுபாட்டில்கள் கிடப்பதுடன் துர்நாற்றம் வீசுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சுத்தம் செய்த ஊழியர்கள்

மேலும், இதனை சரி செய்யும் விதமாக மேம்பாலங்களின் கீழ் பகுதியை சுத்தம் செய்து சிறு, சிறு கடைகள் கட்டி தொழில் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் தென்னூர் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தி அந்த இடத்தை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் தெளித்து இருந்தனர். இதை தொடர்ச்சியாக கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story