நகராட்சி கூட்டம்


நகராட்சி கூட்டம்
x

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கூட்டம் நடந்தது

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் தலைமையில் நடந்தது. ஆணையாளர் கண்மணி முன்னிலை வைத்தார். நகராட்சி இளநிலை உதவியாளர் சுலைமான் தீர்மானங்களை வாசித்தார்.

இதில் நகராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டுவது மற்றும் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிப்பது என்பன உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி பணி மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நகராட்சி துணைத் தலைவர் திலகா சிற்றரசன் நன்றி கூறினார். சுகாதாரத் துறையினர் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க விழிப்புணர்வு நடத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story