கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த நகராட்சி அலுவலர்கள்-பணியாளர்கள்


கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த நகராட்சி அலுவலர்கள்-பணியாளர்கள்
x

கோரிக்கை அட்டை அணிந்து நகராட்சி அலுவலர்கள்-பணியாளர்கள் பணிபுரிந்தனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில மையத்தை சேர்ந்த அலுவலர்கள், பணியாளா்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். அதன்படி பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் 65 பேர் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். இதில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். செயல் திறனற்ற பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் வழங்க வேண்டும். அலுவலக நேரத்தில் ஆய்வு கூட்டங்களை நடத்த வேண்டும். ஆய்வு கூட்டங்களில் கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிறதுறை பணிகளை நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் செய்ய வலியுறுத்துவதை கைவிட வேண்டும். அரசாணை எண்கள் 152, 10-ல் விடுபட்ட பணியிடங்களை வழங்கிட வேண்டும். கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, அவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.


Next Story