வாடகை செலுத்தாத நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு 'சீல்'


வாடகை செலுத்தாத நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாடகை செலுத்தாத நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாடகை செலுத்தாத நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு 'சீல்' வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நகராட்சிக்கு சொந்தமான கடைகள்

மயிலாடுதுறை நகரில் பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய ஒரு சில இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் நகராட்சி மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் ஒரு சில கடையினர் கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள வாடகை செலுத்தாத கடைகளை மூடி சீல் வைக்கும்படி நகராட்சி ஆணையர் சங்கர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் காமராஜர் பஸ் நிலையத்தில் ஏப்ரல் முதல் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு நகராட்சி வருவாய் அலுவலர் தினகர், நகராட்சி மேலாளர் பாலசுந்தரம், சிறப்பு வருவாய் ஆய்வர்கள் பிரபாகரன், வெங்கடேசன் மற்றும் வருவாய் உதவியாளர்கள் நேரில் சென்று உடனடியாக நிலுவையின்றி வாடகை செலுத்துமாறு கேட்டனர். அப்படியும் வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் மூடி சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையம் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

'சீல்'

இதேபோல் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடைகளில் நகராட்சி ஆணையர் ஹேமலதா நகராட்சி அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்புடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சிக்கு வாடகை செலுத்தாத இரண்டு கடைகளை பூட்டி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர். அப்போது வருவாய் ஆய்வாளர் சார்லஸ், இளநிலை உதவியாளர்கள் ராஜகணேஷ், , ராஜரத்தினம், வருவாய் உதவியாளர் ரவி அலுவலக உதவியாளர் ஜானகிராமன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story