முனியாண்டி கோவில் திருவிழா


முனியாண்டி கோவில் திருவிழா
x
தினத்தந்தி 14 Aug 2023 2:45 AM IST (Updated: 14 Aug 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரையில் பிரசித்தி பெற்ற முனியாண்டி கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது.

திண்டுக்கல்

வடமதுரையில் பிரசித்திபெற்ற முனியாண்டி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழா கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் திருவிழா தொடங்கிய நிலையில், அன்றைய தினம் காலை 9 மணி அளவில் புனித தீர்த்தங்கள் மற்றும் பால்குடங்களை பக்தர்கள் வடமதுரை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று, கோவிலுக்கு வந்தடைந்தனர். அதன்பிறகு முனியாண்டிசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மாலை சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்தநிலையில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை பக்தர்கள் கோவில் முன்பு கிடா வெட்டி, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின்னர் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார், பவுர்ணமி பூஜை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் சாணார்பட்டி அருகே கே.அய்யாபட்டியில் உள்ள முனியப்பன்சுவாமி கோவிலில் ஆடி படையல் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கிடா வெட்டி பக்தர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.


Next Story