அடித்து கொலை செய்யப்பட்டவர் யார்?
அடித்து கொலை செய்யப்பட்டவர் யார்?
மடத்துக்குளத்தையடுத்த கருப்புசாமிபுதூர் பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் அமராவதி வாய்க்காலில் பாலத்துக்கு அடியில் தலையில் காயத்துடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதை கண்டனர். அந்த உடலின் மேல் இலை தழைகள் உள்ளிட்ட குப்பைகள் மூடியிருந்தது.மேலும் கழுத்து மற்றும் கைகளில் ருத்ராட்சமாலை அணிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அந்த உடல் காணப்பட்டது. உடனடியாக இதுகுறித்து மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் அந்த பகுதிக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் சிக்னல்கள் உள்ளிட்ட அனைத்து விதமான தடயங்களையும் சேகரித்து வருகின்றனர். அமராவதி கால்வாயில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த நபரால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.