வீடுபுகுந்து வாலிபர் வெட்டிக்கொலை


வீடுபுகுந்து வாலிபர் வெட்டிக்கொலை
x

சிவகங்கையில் வாலிபரை அவரது வீட்டிற்குள்ளேயே புகுந்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை


சிவகங்கையில் வாலிபரை அவரது வீட்டிற்குள்ளேயே புகுந்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒப்பந்த பணியாளர்

சிவகங்கையை அடுத்துள்ள டி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). இவரது மனைவி மீனா. இவர்களுக்கு ராகவானந்தம் (38) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். ராகவானந்தம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ெசல்ேபான் ேகாபுரம் அமைக்கும் பணியில் ஒப்பந்த பணியாளராக வேலைபார்த்து வந்தார்.

இந்தநிலையில் இவருக்கு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ராகவானந்தத்தை அவர்களின் சொந்த வீட்டில் வைத்து பெற்றோர் பராமரித்து வந்தனர். ஆனால் அவர்கள் அந்த வீட்டில் தங்காமல் அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கொலை

இந்தநிலையில் நேற்று காலை ராகவானந்தத்தின் தாய் மீனா, மகனுக்கு உணவு கொடுக்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ராகவானந்தம் வீட்டுக்குள் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனா கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் சரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். ராகவானந்தத்தின் உடலை மீட்டு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனநலம் பாதித்த ராகவானந்தத்தை கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர். அவரை எதற்காக கொலை செய்தனர் என தெரியவில்லை.

சிவகங்கையில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை வீடுபுகுந்து வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story