சிறுவன் உள்பட 2 பேர் கைது


சிறுவன் உள்பட 2 பேர் கைது
x

நீடாமங்கலம் அருகே அறுவடை எந்திர டிரைவர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருமணமான பெண்ணுடன் பழகியதால் அவர் கொலை செய்து புதைக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் அருகே அறுவடை எந்திர டிரைவர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருமணமான பெண்ணுடன் பழகியதால் அவர் கொலை செய்து புதைக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அறுவடை எந்திர டிரைவர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பெரம்பூர் ஊராட்சி முல்லைவாசல் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆசிர்வாதம். இவருடைய மகன் திருமாவளவன்(வயது 21). அறுவடை எந்திர டிரைவரான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. திருமாவளவன் மாயமானது குறித்து நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை-ஆற்றில் உடல் புதைப்பு

இந்த நிலையில் வீட்டின் அருகே மதகு கட்டையில் ரத்தக்கறையும் திருமாவளவன் அணிந்த செருப்பும் இருந்ததை அவரது உறவினர்கள் பார்த்தனர். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் கோரையாற்று பகுதியில் தேடியபோது நடு ஆற்றில் நாணல் செடி புதர்மண்டியுள்ள காட்டில் 6 அடி ஆழத்தில் திருமாவளவன் உடல் புதைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. கொலையாளிகள் அவரை கொன்று அவரது உடலை ஆற்றில் புதைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. இது குறித்த தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் அங்கு வந்து திருமாவளவன் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமணமான பெண்ணுடன் பழகியதால்...

இந்த கொலை சம்பவம் ெதாடர்பாக திருமாவளவனின் நண்பர் ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீதரின் உறவினரான 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் திடு்க்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை வழக்கில் பிடிபட்ட 16 வயது சிறுவனின் சகோதரியை திருமாவளவன் காதலித்து வந்துள்ளார். இதனால் சிறுவனின் சகோதரியை ஸ்ரீதருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகும் திருமாவளவன், சிறுவனின் சகோதரியுடன் பழகியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதரும், 16 வயது சிறுவனும் சேர்ந்து திருமாவளவனை கொன்று ஆற்றில் புதைத்தது தெரிய வந்தது.இதைத்ெதாடர்ந்து ஸ்ரீதர் மற்றும் அவரது உறவினரான 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story