தனியார் நிறுவன ஊழியர் கொலை


தனியார் நிறுவன ஊழியர் கொலை
x
தினத்தந்தி 16 Jun 2022 12:05 AM IST (Updated: 16 Jun 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

கடன் பிரச்சினையில் தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்ததாக கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

கடன் பிரச்சினையில் தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்ததாக கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தனியார் நிறுவன ஊழியர்

ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 48). இவர் காரியாபட்டியை அடுத்த ஆவியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தரராஜனின் சகோதரர் சூசை, விருதுநகர் மேற்கு பாண்டியன் காலனியில் வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் கட்டிட தொழிலாளியான முனியாண்டி என்பவரும் வசித்து வந்தார்.

இதனால் சூசை வீட்டுக்கு அடிக்கடி வந்த சவுந்தரராஜனுக்கும், முனியாண்டிக்கும் பழக்கம் ஏற்பட்டது. முனியாண்டி மனைவி முத்து. இவர் விருதுநகர் தெப்பம் அருகில் பழச்சாறு கடை வைத்துள்ளார். சவுந்தரராஜனுக்கு பணம் தேவைப்பட்ட நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முனியாண்டியின் மனைவி முத்து, தனக்கு தெரிந்த 2 பேரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

சில மாதங்களாக சவுந்தரராஜன் அதற்கு வட்டி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் முத்துவிடம் பணம் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆதலால் முத்து, சவுந்தரராஜனிடம் இதுபற்றி தகவல் கொடுத்தார்.

கொலை

இந்தநிலையில், சவுந்தரராஜன் நேற்று விருதுநகர் வந்து முத்துவின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு அவரது மகன் கட்டிடதொழிலாளியான அஜித் (23) இருந்துள்ளார். அப்போது இருவருக்கும் கடன் பிரச்சினை குறித்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தகராறு முற்றியதில் சவுந்தரராஜனின் முகத்தில் குத்தியதாக கூறப்படுகிறது, இதனால் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதுபற்றி அஜித், தனது தாயார் முத்துவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து ஆம்புலன்சில் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சவுந்தரராஜன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார், அஜித்தை கைது செய்தனர்.


Related Tags :
Next Story