தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை
நாகமலைபுதுக்கோட்டையில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டையில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிரபல ரவுடி
மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை சின்னக்கண்ணு நகரை சேர்ந்த ராஜாராம் மகன் உதயக்குமார் என்கிற கொக்கிகுமார் (வயது 28). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. குமாரும், ஐவகர் நகரை சேர்ந்த விக்னேஷ், சின்னக்கண்ணு நகரை சேர்ந்த கார்த்திக் ஆகியோரும் நண்பர்கள் ஆவர்.
இந்நிலையில் விக்னேசின் செல்போனை குமார் திருடியதாக கூறி அவரிடம் நேற்று காலை விக்னேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் தகராறு செய்து விட்டுச்சென்றதாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று மாலை நாகமலைபுதுக்கோட்டை அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி காம்பவுண்டிற்குள் குமார் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக விடுதி காவலாளி பேயாண்டி என்பவர் குமாரின் அண்ணன் ஜெயபாண்டியிடம் கூறினார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து. தகவல் அறிந்து அங்கு வந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் குமார் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெயபாண்டி கொடுத்த புகாரின்பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கொலை செய்த நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.