பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவிலில்முருகன்- சண்முகர் எதிர்சேவை காட்சி
பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவிலில் முருகன்- சண்முகர் எதிர்சேவை காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழியில் உள்ள பிரசித்தி பெற்ற திருமலை குமார சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக ஏழாம் திருநாளான நேற்று முருகன்- சண்முகர் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி ஐந்துபுளி மண்டபத்திலிருந்து சுவாமி அழைப்பு நடைபெற்றது. தொடர்ந்து பண்பொழியில் உள்ள நகரீஸ்வரமுடையார் கோவில் வளாகத்தில் முருகன்- சண்முகர் எதிர்சேவை காட்சி இடம் பெற்றது. இதில் சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தபோது பக்தர்கள், திருமலை குமரனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து முருகன் - சண்முகர் சிவன் கோவில் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நேற்று நடந்த முருகன் - சண்முகர் எதிர்சேவை நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டமும், 5-ந் தேதி தைப்பூசம் அன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.