2 டன் முருங்கைக்காய் கொள்முதல்
வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக் காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
அதன்படி 10 விவசாயிகள் 2 டன் முருங்கை காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ கரும்பு முருங்கைக்காய் ரூ. 70-க்கும், செடி முருங்கைக்காய் ரூ. 50-க்கும், மர முருங்கைக்காய் ரூ.40-க்கும் கொள்முதல் செய்தனர். இந்த தகவலை முருங்கை வியாபாரி செல்லப்ப கவுண்டர் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire