வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் - தமிழக அரசு உத்தரவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா தியேட்டர் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா தியேட்டர் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வன விலங்கு பாதுகாப்பு குறித்து மக்கள் புரிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம், இயற்கை பாதுகாப்பு குறித்த ஆர்வத்தை இளம் மனங்களில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.4.3 கோடி செலவில் புதிய மிருகக்காட்சி சாலை அருங்காட்சியகம், வனவிலங்குகளை புதிய வழியில் கண்டறிய காட்சி மாதிரியுடன் விளக்க வளாகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பூங்காவில் 3டி , 7 டி திரையரங்கம் அமைக்கப்பட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story