இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் சாமி தரிசனம்


இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 1 Sep 2023 6:45 PM GMT (Updated: 1 Sep 2023 6:45 PM GMT)

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு திரைப்பட இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் தனது குடும்பத்துடன் வந்தார். பின்னர் தனது தந்தை வெங்கடேசுக்கு, ஆயுள் விருத்திக்காக ஹோமம் செய்து வழிபட்டார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளில் ஜி.வி. பிரகாஷ்குமார், தனது மனைவி சைந்தவி, மற்றும் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவிலின் குருக்கள் பிரசாதம் வழங்கினார்.


Next Story