இசையாஞ்சலி நிகழ்ச்சி
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இசையாஞ்சலி நிகழ்ச்சி
விருத்தாசலம்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருமுதுகுன்றம் இசை சங்கம் சார்பில் ஆண்டுதோறும் இசையாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இசையாஞ்சலி நிகழ்ச்சி கடந்த 1-ந் தேதி தொடங்கி நாளை(வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இதில் தொடக்க விழாவான முதல்நாள் அன்று தேதி நாத சங்கமம் நிகழ்ச்சியில் நாதஸ்வரம், தவில், புல்லாங்குழல், தபேலா, வயலின், ரிதம் வாசிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் கர்நாடக இசை நிகழ்ச்சியும், நேற்று கருவி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் மூத்த வக்கீல் பாலச்சந்திரன் கே.எஸ்.ஆர்.ஹைடெக் பள்ளியின் தாளாளர் சுந்தர வடிவேல், கல்கி ஸ்டூடியோ உரிமையாளரும் லயன் சங்க செயலாளருமான சந்திரசேகரன், பொருளாளர் முத்து நாராயணன், விஸ்வா கன்ஸ்டிரக்ஷன் உரிமையாளர் என்ஜினீயர் செல்வராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று(வியாழக்கிழமை) கர்நாடக இசை, நாளை(வெள்ளிக்கிழமை)5 பரதநாட்டியமும் நடைபெற உள்ளது. இசை நிகழ்ச்சிகளில் வெங்கடேசன், சண்முகசுந்தரம், ஆறுமுகம், மணிகண்டன், வெங்கட், மோகன்தாஸ், பிரபு, ராகுல், திவ்ய பூங்கொடி, ரமேஷ் ஆகிய வித்வான்கள் கலந்து கொண்டனர். தலைவர் அருணாசலம் செயலாளர் ஜோதிடர் ஜெகநாதன், லயன்ஸ் சங்க தலைவர் என்ஜினீயர் அருள், இசையாஞ்சலி செயலாளர் தமிழ்மணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.