முசிறி மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா


முசிறி மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
x

முசிறி மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.

திருச்சி

முசிறி மேலத்தெருவில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி தேர் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. தேரில் வலம் வந்த அம்மனுக்கு தேங்காய் பழம் உடைத்து, தீபாராதனை காட்டி பக்தர்கள் வழிபட்டனர். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story