இந்துக்கள் மயானம் அருகே முஸ்லிம்கள் மயானம்


இந்துக்கள் மயானம் அருகே முஸ்லிம்கள் மயானம்
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

இந்துக்கள் மயானம் அருகே முஸ்லிம்கள் மயானத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டு கூடலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோயம்புத்தூர்

துடியலூர்

இந்துக்கள் மயானம் அருகே முஸ்லிம்கள் மயானத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டு கூடலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோரிக்கை

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கோவை- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் உள்ள 15 சென்ட் பூமியை எடுக்க நெடுஞ்சாலை துறை அளவீடு செய்துள்ளது

இந்தபள்ளி வாசலை 800 குடும்பங்கள் தொழுகைக்காகவும், அடக்கம் செய்யவும் பயன்படுத்தி வருவதாகவும், ஆகவே அதற்கு மாற்றாக துடியலூர் அருகே உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் இடஒதுக்கீடு செய்து தருமாறு கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதன் பேரில் சிறப்பு நகராட்சி கூட்டம் நடைபெற்றது.நகராட்சி தலைவர் அறிவரசு தலைமையில் நடந்த கூட்டத்தில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தெற்குப்பாளையம் பிரிவிற்கு தெற்கே மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்துக்கள் மயானத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இடத்தை ஒதுக்கீடு செய்து முஸ்லிம் மக்கள் அடக்கத்திற்கு பயன்படுத்தி கொள்ள அனுமதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத நல்லிணக்கம்

இதில் நகராட்சி துணைத்தலைவர் ரதிராஜேந்திரன் உள்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.இது தொடர்பான ஆணையை சுன்னத் ஜமாத் செயலர் அப்துல் ரகுமான், பொருளாளர் இப்ராகிம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இது குறித்து தலைவர் அறிவரசு கூறுகையில்,அப்பகுதியில் சுகாதாரம் மேம்படுத்தப்படும் நடைபாதை அமைக்கப்பட்டு பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்துக்கள், முஸ்லீம்களுக்கு அருகருகே மயானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

1 More update

Next Story