முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி
பொன்மலைப்பட்டி, ஜூன்.14-
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவிகளை விடுதலை செய்யக்கோரி திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பஸ் நிறுத்தம் அருகே அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஐனுல்லா மஹது தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் காஜா முஹைதீன், கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story