முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தினர்


முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்   பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தினர்
x

விழுப்புரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

விழுப்புரம்

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். அந்த வகையில் விழுப்புரம் மந்தக்கரை யூமியா ஜாமிஆ மஸ்ஜித், பாகர்ஷா வீதி பாகர்ஷா மஸ்ஜித், வண்டிமேடு மஹல்லா மஸ்ஜித், வடக்கு தெரு ஷெரீப் மஹல்லா மஸ்ஜித், வாலாஜா மஸ்ஜித், மருதூர் தக்வா மஸ்ஜித், கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள ரஹ்மான் மஸ்ஜித், ஜங்ஷன் நூர்மஸ்ஜித், கந்தசாமி லே-அவுட் அபுபக்கர் சித்திக் மசூதி, கே.கே.நகர் மதினா மஸ்ஜித், செஞ்சி சாலையில் உள்ள உமர்ஷா நிதாயே இஸ்லாம் மஸ்ஜித், மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரில் உள்ள மஸ்ஜிதே அன்சாரி, காணை அபுபக்கர் சித்திக் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கொண்டு ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். பின்னர் குர்பானி கொடுக்கப்பட்டு ஏழைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இறைச்சி வழங்கப்பட்டது. இதேபோல், கீழ்பெரும்பாக்கம் தக்கா தெரு அஹ்லே ஹதிஸ் மஸ்ஜித் பள்ளி வாசல் மைதானத்தில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.


Next Story