முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
பத்தமடையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
நபிகள் நாயகம் பற்றி தவறான கருத்துகளை பரப்பி வருகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நெல்லை மாவட்ட ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில், பத்தமடை பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
செயற்குழு உறுப்பினர் மீரான் முகைதீன் அன்வாரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முகமது ராசிக், துணைத்தலைவர் ஜாஹிர் உசேன், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் பீர் மஸ்தான், நகர தலைவர் ஷரீப், வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஷேக் மீரான், செயலாளர் மீரான் கனி, காஜா முகைதீன், டாக்டர் ஆபிருத்தீன் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story