இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
நபிகள்நாயகம் குறித்து தவறாக விமர்சித்த பா.ஜனதா நிர்வாகிகள் நுபுல்சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டாவை கைது செய்யாத மத்திய அரசை கண்டித்து வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் இஸ்லாமியா்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தோப்புத்துறை ஜமாத் மன்ற துணை தலைவர் அப்துல்சலாம் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் ஜெய்னுதீன் வரவேற்றார். இதில், தலைமை இமாம் ஷாகுல் ஹமீது பாக்கவி, துணை இமாம் சயீதுஅலி முனிரி, ஜமாத் மன்ற பொருளாளர் யூசுப்ஷா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் கலந்துகொண்டு நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியவர்களை கைது செய்யக்கோரி பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story