விநாயகருக்கு சீர் கொண்டு வந்த முஸ்லிம்கள்


விநாயகருக்கு சீர் கொண்டு வந்த முஸ்லிம்கள்
x
தினத்தந்தி 19 Sept 2023 2:45 AM IST (Updated: 19 Sept 2023 2:46 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் விநாயகருக்கு முஸ்லிம்கள் சீர் கொண்டு வந்தனர்.

கோயம்புத்தூர்

விநாயகர் சதுர்த்தியையொட்டி பொள்ளாச்சி மாட்டு சந்தையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மத ஒற்றுமையை உணர்த்தும் வகையில் சின்ன பள்ளிவாசல் நிர்வாகி உசேன் தலைமையில் முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து பழங்கள், இனிப்பு வகைகள் மற்றும் சிறிய அளவிலான விநாயகர் சிலை ஆகியவற்றை சீர் வரிசையாக கொண்டு வந்து கொடுத்தனர். இதையடுத்து முஸ்லிம்களுக்கு வியாபாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இதுகுறித்து சின்ன பள்ளிவாசல் நிர்வாகி உசேன் கூறுகையில், தமிழகத்தை பொறுத்தவரை இந்துக்களும், முஸ்லிம்களும் மிகவும் ஒற்றுமையாக உள்ளோம். பொள்ளாச்சியில் நடைபெறும் மாரியம்மன் பண்டிகை உள்ளிட்ட இந்துக்களின் நிகழ்ச்சிகளில் நாங்கள் மகிழ்ச்சியோடு பங்கேற்கிறோம். அதேபோல் பக்ரீத், ரம்ஜான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இந்து சகோதரர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கின்றனர். மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம் என்றார்.

1 More update

Next Story