தோட்டக்கலை கல்லூரியில் முத்தமிழ் விழா
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் முத்தமிழ் விழா நடந்தது.
தேனி
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முத்தமிழ் விழா 2 நாட்கள் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். இயற்கை வள மேலாண்மை துறை தலைவர் பாக்கியவதி வரவேற்றார். பயிர் பாதுகாப்புத்துறை தலைவர் பேராசிரியர் முத்தையா வாழ்த்துரை வழங்கினார். விழாவில் இயல், இசை, நாடகம், கவியரங்கம், பட்டிமன்றம் என தமிழரின் சிறப்பை பறைசாற்றும் வகையில் பல்வேறு இலக்கிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் வழங்கினார். முடிவில் மாணவர் மன்ற செயலாளர் சிவமாரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story