குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவில்பார்வதி திருக் கோலத்தில் முத்தாரம்மன் எழுந்தருளல்


குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவில்பார்வதி திருக் கோலத்தில் முத்தாரம்மன் எழுந்தருளல்
x
தினத்தந்தி 29 Sep 2022 6:45 PM GMT (Updated: 29 Sep 2022 6:46 PM GMT)

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவில்பார்வதி திருக் கோலத்தில் முத்தாரம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் இரவு அம்மன் ஒரு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மூன்றாம் நாள் தசரா திருவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் நலம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் காவடி திருவீதி உலா வருதல் நடைபெற்றது.


Next Story