முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்
முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
சோமரசம்பட்டையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இரவில் அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்தார். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அன்ன வாகனம், காளைவாகனம், நாக வாகனம், தாமரை வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையம் வந்தடைந்தது.
இதில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பழனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பொன் மாரிமுத்து, தக்கார் புனிதா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.