முத்து மாரியம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா


முத்து மாரியம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே முத்து மாரியம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா

திருவாரூர்

நன்னிலம்:

நன்னிலம் அருகே உள்ள செங்கனூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் சாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முத்துமாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. அதையடுத்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. மஞ்சள் நீராட்டு விழாவில் கிராம மக்கள் கலந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழுந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story