முத்துக்கருப்பையா கோவில் திருவிழா


முத்துக்கருப்பையா கோவில் திருவிழா
x

முத்துக்கருப்பையா கோவில் திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற, பழமை வாய்ந்த முத்துக்கருப்பையா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து முத்துக்கருப்பையா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தது. நேற்று கோவிலின் இறுதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் பெண்கள் மதுகுடம் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் மேள தாள முழக்கத்தோடு பால்குடம், காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இளைஞர்கள் இடுப்பில் வேல் குத்தி நடனமாடி ஊர்வலமாக சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story