முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா


முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா
x

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் கொடை விழா ஆவணி 2-வது செவ்வாய்க்கிழமை நடைபெறும். இந்த ஆண்டு கோவில் கொடை விழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. முக்கிய கொடை விழா நேற்று முன்தினம் நடந்தது.

இதையொட்டி அன்று பகலில் அம்மன் சந்தன காப்பு தரிசனம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் திருவிளக்கு பூஜை, வில்லிசை, இரவு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், இரவில் புஷ்ப அலங்கார தரிசனம், அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் வீதி உலா வருதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி அன்னதானம் நடந்தது. நேற்று காலையில் வீதி உலா சென்ற அம்மன் கோவில் வந்து சேர்ந்தார். அதனை தொடர்ந்து பக்தர்கள் பொங்கலிட்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story