முத்துமாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா


முத்துமாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா
x

கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் அம்பாள் வீதியுலாவும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சிகளான தேரோட்டம், தீர்த்த திருவிழா மற்றும் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் ஆகியவை நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு தெப்பத்திருவிழா நடந்தது. கோவில் முன்பாக அமைந்துள்ள குளத்தில் வண்ண விளக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்பாள் வீற்றிருக்க கண்கவர் வாணவேடிக்கைகளுடன் பக்தர்கள் தெப்பத்தை இழுத்து சென்றனர்.

1 More update

Next Story