முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்


முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

நாகை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


வைகாசி திருவிழா

நாகை வெளிப்பாளையம் முத்து மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா கடந்த 3-ந் தேதி ருத்ராபிஷேகம், அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அன்று இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 4-ந் தேதி கொடியேற்றப்பட்டு, இரவு மகாலட்சுமி அவதார அலங்காரத்தில், முத்து மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.தொடர்ந்து கிளி வாகனம், வேணுகோபால் அவதாரம், ரிஷப வாகனம், குதிரை, யானை வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

தேரோட்டம்

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க, தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது.தொடர்ந்து மாலை 6 மணிக்கு காத்தவராய சாமி புறப்பாடும், இரவு 7 மணிக்கு செடில் உற்சவமும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி சுற்ற வைத்தனர்.

முத்து பல்லக்கில் வீதியுலா

நாளை(செவ்வாய்க்கிழமை) இரவு முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், நாளை மறுநாள்(புதன்கிழமை) இரவு ஊஞ்சல் உற்சவமும், 17-ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், 18-ந் தேதி மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், விசேஷ படையல், அன்னதானமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


Next Story