முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா

கிணத்துக்கடவு அருகே உள்ள நெம்பர் 10 முத்தூரில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மதியம் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை விநாயகர் வழிபாடு, புண்ணியாகம், வாஸ்து பூஜை, மிருத்சங்கரகரணம், அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம், முதற்கால வேள்வி பூஜை நடைபெற்றது.

இதையடுத்து நேற்று காலை 7 மணிக்கு மகா கணபதி பூஜை, 2-ம் கால யாக பூஜை, துவார பூஜை, துர்கா, லட்சுமி, பார்வதி ஹோமம், 108 திரவிய ஹோமம் நடைபெற்றது.

அன்னதானம்

அதன்பின்னர் கோபுர விமானத்திற்கு புனித நீர் மேள-தாளங்கள் முழங்க சுமந்து செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து முத்து மாரியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்துமாரி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நெம்பர் 10 முத்தூர் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.


Next Story