முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடை விழா


முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடை விழா
x
தினத்தந்தி 30 April 2023 12:30 AM IST (Updated: 30 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடை விழா 30-ந் தேதி தொடங்குகிறது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் சித்திரை பெருங்கொடை விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான விழா 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வருசாபிஷேகத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து காலை 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு உடன்குடி வட்டாரப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி, வறட்சி நீங்கி பசுமை வேண்டி பெண்கள் பாடல்கள் பாடி வழிபாடு செய்யும் திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு இளையபெருமாள் பக்தி இன்னிசை கச்சேரி ஆகியவை நடக்கிறது.

1-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்துபவனி வருதல், 12 மணிக்கு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.

2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி, இரவு 7 மணிக்கு வில்லிசை, மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை உடன் அம்மன் வீதி உலா வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சந்தன மாரியம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குதல், 3-ந் தேதி பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் மஞ்சள் நீராடுதல், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சப்பரத்தில் பவனிவருதல் நடக்கின்றது.

வருகிற 4-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அக்கினி குண்டத்தில் பக்தர்கள் இறங்குதல், இரவு 8 மணிக்கு ஆடல், பாடல் நிகழ்ச்சி, 5-ந் தேதி சங்கடக்கார சுவாமி கோவிலில் காலை 8 மணிக்கு வருசாபிஷேகம், பகல் 12 மணிக்கு அலங்காரம் தீபாராதனை, இரவு 12 மணிக்கு சிறப்பு படையல் பூஜை, மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.




Next Story